சுன்னாகத்தில் பொலிஸார் மீது இளம்தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples Accident
By Rakshana MA Nov 10, 2024 01:33 PM GMT
Rakshana MA

Rakshana MA

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் மனைவி மற்றும் அவரது கணவர் மீது பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவர்களின் பச்சிளம் குழந்தையை தூக்கி வீசியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய அலுவலகமானது நேற்று (09) இலங்கை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் (Piriyantha Weersasuriya) திறந்து வைக்கப்பட்டு சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பில் AI உதவியுடன் 5 நிமிடங்களில் கவிதை : சோழன் சாதனை!

மட்டக்களப்பில் AI உதவியுடன் 5 நிமிடங்களில் கவிதை : சோழன் சாதனை!

தாக்குதல் சம்பவம்

குறித்த குடும்பத்தினர் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, அவர்களது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் முந்தி சென்றவர்கள் வாகனத்திற்கு முன்பாக தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சுன்னாகத்தில் பொலிஸார் மீது இளம்தாய் பரபரப்பு குற்றச்சாட்டு! | The Young Mother Allegation On Sunnagam Police

இந்த சம்பவம் ஏற்பட்ட இடத்திற்கு சிவில் ஆடையில் வந்த பொலிஸார் வாகன சாரதியுடன் முரண்பட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலின் போது வாகனத்தில் இருந்த அவரது மனைவி இரண்டு மாதங்கள் ஆன தனது குழந்தையுடன் இறங்கி கணவர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை தடுக்க முற்பட்ட வேளை அவரது கையில் இருந்த குழந்தையை பறித்து எறிந்து தாயையும் தாக்கியுள்ளனர்.

இளம்தாயின் வாக்குமூலம்

மேலும் குறித்த தாக்குதல் தொடர்பில் அப்பெண் தெரிவிக்கையில், நாங்கள் வாகனத்தில் பயணித்துக் கொண்டிந்த வேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் எம்மை முந்தி சென்று விபத்துக்கு உள்ளானர்கள். அவர்கள் மதுபோதையில் இருந்தமையால் நாங்களும் வாகனத்தை நிறுத்தி விட்டோம்.

சுன்னாகத்தில் பொலிஸார் மீது இளம்தாய் பரபரப்பு குற்றச்சாட்டு! | The Young Mother Allegation On Sunnagam Police

அப்போது சிவில் உடையில் வந்தவர்கள் எனது கணவரிடம் சாரதி அனுமதி பத்திரம், வாகன ஆவணங்களை கேட்டிருந்தனர். சிவில் உடையில் உள்ள உங்களுக்கு அதனை காண்பிக்க தேவையில்லை. விபத்து நடந்துள்ள இடத்திற்கு போக்குவரத்து பிரிவு பொலிஸாரை வரவழையுங்கள் என அவர் பதிலளித்தார்.

அதற்கு சிவில் உடையில் வந்திருந்தவர்கள் எனது கணவனை மூர்க்க தனமாக தாக்கினார்கள். அதனை தடுக்க சென்ற என்னையும் தாக்கி, எனது 2 மாத குழந்தையையும் என் கையில் இருந்து பிடுங்கி எறிந்தனர்.

பின்னர் வந்த பொலிஸார் எங்கள் வாகனத்தை பொலிஸ் நிலையம் எடுத்து சென்றதுடன் எனது கணவரையும் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

முகத்தை முழுமையாக மூட தடை: சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடி

முகத்தை முழுமையாக மூட தடை: சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடி

மக்கள் மற்றும் சட்டத்தின் ஆதரவு

குறித்த சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த சட்டத்தரணி மணிவண்ணன், பார்த்தீபன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக நின்றிருந்தனர்.

சட்டத்தரணி மணிவண்ணன், பொலிஸ் நிலையத்தினுள் சென்று கைது செய்யப்பட்டிருந்தவரை பார்வையிட்டு, சம்பவம் தொடர்பில் நேரில் கெட்டறிந்து கொண்டுள்ளார்.

சுன்னாகத்தில் பொலிஸார் மீது இளம்தாய் பரபரப்பு குற்றச்சாட்டு! | The Young Mother Allegation On Sunnagam Police

இது தொடர்பில் ஊடகங்களுக்கு சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், 

மதுபோதையில் பொலிஸார் கட்டுப்பாட்டின்மையுடன் இருப்பது பாரதூரமான அடிப்படை மனிதவுரிமை மீறல் இந்த குற்றச்செயலை செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

மேலும் , இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து செயற்பட சட்டத்தரணிகள் ஆகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை நேரில் பார்வையிட்டு, விசாரித்த போது, தங்களை பொலிஸ் நிலையத்தினுள் வைத்தும் பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சட்டரீதியான நடவடிக்கைகள்

இது தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். இந்த சம்பவம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக முன்னெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

சுன்னாகத்தில் பொலிஸார் மீது இளம்தாய் பரபரப்பு குற்றச்சாட்டு! | The Young Mother Allegation On Sunnagam Police

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக பொலிஸ் நிலையம் முன்பாக குவிந்த மக்களை அங்கிருந்து களைந்து செல்லுமாறு பொலிஸார் பணித்து, மக்களை அங்கிருந்து விரட்ட முற்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

அங்கிருந்த யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ. பார்த்தீபன் பொலிஸாரிடம் நியாயம் கேட்க முற்பட்ட வேளை, அவரை போதையில் நின்று குழப்பம் விளைவிப்பதாக கூறி பொலிஸார் தாக்கமுற்பட்டுள்ளனர்.

மேலும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று (10) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

மின் கட்டணம் குறைக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

மின் கட்டணம் குறைக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW