புர்கா அணிந்து வந்த திருடன், பெண்ணிடம் சிக்கினான்.
புர்கா அணிந்து கொண்டு வந்த திருடன், கோழிகளை திருட முயன்றபோது அம்முயற்சி கைகூடாமல் போன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது..
அத்துடன், திருடன் கொண்டுவந்த கத்திகள் இரண்டையும் வீட்டின் பெண் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம், பொகவந்தலாவை ஆரியபுரவில் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. .
வீட்டிலுள்ள நாய் அதிகாலை 1.30 மணியளவில் கடுமையாக குரைத்துள்ளது. . அதனையடுத்து வீட்டினுள் இருந்த பெண் வெளியே வந்து பார்த்துள்ளார். அங்கு புர்கா அணிந்து வந்த நபரொருவர் பதுங்கியுள்ளார்.
இதனை கண்ட அந்தப் பெண் அவருடன் சண்டை பிடித்த போது புர்கா கீழே விழுந்துள்ளது. வந்தவர் ஆண் என கண்டதன் பின்னர், அவருடன் அப்பெண் மீண்டும் சண்டை பிடித்துள்ளார் .
இந்நிலையில், தனது மனைவியுடன் மல்லுக்கட்டியவர் திருடன் என்றும், தனது வீட்டில் வளர்க்கும் கோழிகளை திருடவே அத்திருடன் வந்துள்ளார் என்றும். திருடனைப் பிடிக்குமாறு பொகவந்தலாவை பொலிஸில் நிலையத்தில் அப்பெண்ணின் கணவன் முறைப்பாடு செய்துள்ளார்.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் திருடன் ஓடுவதும், பெண் திருடனுடன் மல்லுக்கட்டுவதும் பதிவாகியுள்ளது.