பால்மாவின் விலை மீண்டும் குறைவடையும்!
Sri Lanka
By Nafeel
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலைகள் 200 ரூபாவால் குறைக்கப்பட்டதற்கமைய, ஜூலை மாத ஆரம்பத்திலும் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.