மனைவியை ஊசி அடித்து கொல்ல முயன்ற டாக்டர் கைது.

Trincomalee Sri Lanka
By Nafeel May 01, 2023 08:14 AM GMT
Nafeel

Nafeel

இன்சுலின் செலுத்தி மனைவியை கொல்ல முயன் தனது மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரைபம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதிகப்படியான இன்சுலின் ஊசி மூலம் மயக்கமடைந்த பெண், ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருமணமாகி சில காலம் குழந்தை பேறு இல்லாத காரணத்தால் மனைவி, மருத்துவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளமை குறித்து விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். மருத்துவர் கொழும்பிலுள்ள தமது வீட்டுக்கு அடிக்கடி வருகை தருவதில்லை என தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், சந்தேகநபரான வைத்தியர், அடிக்கடி தகராறு செய்யும் தமது மனைவியை கொல்லும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும், உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க மனைவியின் உடலில் இன்சுலின் ஊசியை வலுக்கட்டாயமாக செலுத்தி அவரை கொல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மயக்கமடைந்த மனைவி பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய, சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். செய்திகளை உடனுக்குடன் பெற எமது Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்.