சமையல் எரிவாயுவின் விலையும் குறைகிறது

Colombo Sri Lanka
By Nafeel May 01, 2023 03:42 PM GMT
Nafeel

Nafeel

சமையல் எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் 70 சத வீதத்திலிருந்து 35 சத வீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என்றும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய சாகல ரத்நாயக்க, 'எண்ணெய் விலை குறைந்துள்ளதால்,

அடுத்த சில நாட்களில் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புகிறோம் என்றார்.