தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மொட்டுக்கட்சி முன்னேறும்! நாமல் சுட்டிக்காட்டு

By Dharu Apr 15, 2026 06:43 AM GMT
Dharu

Dharu

கடந்த  கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சி முன்னேறும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்கல்லவில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்ற பிறகு, ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

சவாலான காலம்

“சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு என்பது பாதுகாக்கப்பட்டு வருங்கால சந்ததியினருக்குக் கடத்தப்பட வேண்டிய ஒரு பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம்.

நாடு ஒரு சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ஒற்றுமை மற்றும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் இதை வெற்றிகொள்ள முடியும். 

அனைவரும் தவறுகள் செய்வார்கள் என்பதை நாம் புரிந்துகொண்டு, அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்.

மேலும், கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், சமூகம் கடந்தகாலத் தவறுகளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிடுள்ளார்.