தம்பலகாமம் பிரதேச செயலக குடிசன மதிப்பீடு ஆரம்பம்
Trincomalee
Sri Lanka
Eastern Province
By Laksi
2024 ஆம் ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பீடானது திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (14) பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் குறித்த குடிசன தொகை மதிப்பீடு இடம் பெற்றுள்ளது.
கணக்கெடுப்பு
இந்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட வெளிக்கள உத்தியோகத்தர்கள், குடிசன மதிப்பீட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கணக்கெடுப்பானது இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற 15 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |