தம்பலகாமம் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அருண் கேமசந்திர தலைமையில் தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கூட்டமானது, நேற்று (18.07.2025) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் ஒருங்கமைப்பிலும் இடம்பெற்றது.
முக்கிய கலந்துரையாடல்
தம்பலகமம் பிரதேச செயலகப் பகுதியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பிரச்சினைகள் என பலதும் கலந்துரையாடப்பட்டதுடன் கடவானை அட்டவானை மேய்ச்சல் தர பிரச்சினை, யானை மனித மோதல் முரண்பாடு ஊடான குப்பை மேட்டு பிரச்சினை மற்றும் அனர்த்த காலங்களில் அதிகமாக முள்ளிப்பொத்தானை ஜாமியா நகர், பாலம்போட்டாறு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.
இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்கான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது பிரேரனையில் முன் வைத்தார்.
அபிவிருத்தி திட்டம்
குளங்களின் புனரமைப்பு வீதி அபிவிருத்தி வனஜீவராசிகள் திணைக்களம் ஊடான தீர்வு விவசாய செய்கை விரிவாக்கம் தொடர்பிலும் சிராஜ் நகர் சேனாவெளி குளப் பிரதேசத்தை சுற்றுலா பகுதியாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டிருந்தன.
குறித்த கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








