இன்று முதல் விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல அனுமதி

Sri Lanka Thailand Tourist Visa World
By Shalini Balachandran Jul 15, 2024 05:16 AM GMT

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின் படி ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள்

அத்தோடு,  விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன் அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல அனுமதி | Thailand Allows Visa Free Entry For Tourist

மேலும், தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW