இறக்குமதி செய்யப்படும் இரண்டு உணவுப் பொருட்களுக்கு வரி!

Onion Potato Sri Lanka Import
By Rukshy Aug 27, 2025 07:19 AM GMT
Rukshy

Rukshy

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான சிறப்புப் பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி திருத்தம் நேற்று (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கேர விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி! 12 பேர் கவலைக்கிடமான நிலையில்

கேர விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி! 12 பேர் கவலைக்கிடமான நிலையில்

முதல் 3 மாத காலத்திற்கு 

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்டிருந்த சிறப்புப் பண்ட வரி ரூ.60 இல் இருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் இரண்டு உணவுப் பொருட்களுக்கு வரி! | Tax For Import Onion Potatoes Sri Lanka

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீதான சிறப்புப் பண்ட வரி கிலோவுக்கு ரூ.10 ஆக இருந்து ரூ.40 அதிகரித்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி திருத்தம் நேற்று முதல் 3 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்று நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் உள்ள உள்ளூர் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

zoom ஊடாக வழக்கில் இணைந்தார் ரணில்!

zoom ஊடாக வழக்கில் இணைந்தார் ரணில்!