வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்
Sri Lankan Peoples
Money
World
Income Tax Department
By Rakshana MA
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மூலம் நாட்டிற்கு டிஜிட்டல் சேவைகள் மூலம் அனுப்பப்படும் பணத்திற்கு வற் வரி(VAT Tax) அறவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது.
வரி திருத்தம்
இலங்கையில் வசிக்காத தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வற் பொருந்தும் என்று உள்நாட்டு வருவாய் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் பெறுமதி சேர் வரி திருத்த சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |