நிந்தவூரில் தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நடைபவனி

Sri Lankan Peoples Nintavur Public Health Inspector Medicines
By Rakshana MA Apr 17, 2025 05:33 AM GMT
Rakshana MA

Rakshana MA

நிந்தவூர்(Nintavur) பிரதேசத்திலுள்ள மக்களுக்கு தொற்றா நோய்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைபவனி இன்று(17) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஜே.சிவசுப்பிரமணியம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் நிந்தவூர் 11ஆம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

"ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் நடைபெற்றுள்ளது.

போர் நிறுத்தத்தை நிராகரிக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் தீவிரமடையும் நிலவரம்

போர் நிறுத்தத்தை நிராகரிக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் தீவிரமடையும் நிலவரம்

விழிப்புணர்வு நடைபவனி

இன்றைய காலகட்டத்தில் தொற்று நோய் மூலம் நிகழும் மரணங்களை விட தொற்றா நோய்கள் மூலம் நிகழும் இழப்புக்களும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

நிந்தவூரில் தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நடைபவனி | Awareness Walk At Nintavur  

இந்நிலையில் தொற்றா நோய்கள் மூலம் நிகழும் இழப்புகளும், அதனால் பொருளாதார இழப்புகளில் இருந்தும் மீள முடியாமல் பல குடும்பங்களும் தவிக்கின்றன.

அத்தோடு மக்களிடையே தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வும் மிக குறைவாகவே காணப்படுகிறது.

மேலும், இதன்போது தொற்றா நோய் சம்பந்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

காற்றின் தரம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்த முஸ்லிம் நாடு..!

இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்த முஸ்லிம் நாடு..!

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW