புத்தாண்டுக்காக ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கும் பரிசு

Shavendra Silva Wickremesinghe Ranil Major General Vikum Liyanage
By Benat Apr 12, 2024 04:29 PM GMT
Benat

Benat

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியிலிருக்கும் சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.

வீடுகள் அல்லது பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காவிட்டாலும் சகல பிள்ளைகளுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிக் கிட்ட வேண்டும் என்ற நோக்கில், “சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கும் புத்தாண்டு” என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி அலுவலகம், “சிலோன் பிஸ்கட் கம்பனி” மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இனிப்புப் பண்டங்களும் பரிசுப் பொதிகளும் 

நாடளாவிய ரீதியிலிருக்கும் 336 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் 10,000 க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் இனிப்பு பண்டங்களும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

tamil-sinhala-new-year

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின்(Shavendra Silva)  வழிகாட்டலின் கீழ் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின்(Major General Vikum Liyanage) மேற்பார்வையில் முன்னெடுக்கப்படுகிறது.

இதுவரை காலமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நுவரெலியாவிருக்கும் சிறுவர் இல்லங்களுக்கு புத்தாண்டு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், இம்முறை அந்த திட்டத்தை நாடளாவிய ரீதியில் உள்ள சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் பிள்ளைகளுக்கு பரிசுகளையும் இனிப்புப் பண்டங்களையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.