ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு பயணம்
ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை புது டெல்லிக்கு பயணம் செய்ய ஐ.நா. பாதுகாப்பு சபை அவருக்கு அனுமதி அளித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் அமீர்கான் முத்தாகி இருப்பதால், இந்தியாவுக்குச் செல்வதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனுமதி அவருக்கு அவசியமாகவிருந்தது.
அதிகாரபூர்வ அறிவிப்பு
தலிபான் வெளியுறவு அமைச்சர் ஒருவர் புது டெல்லிக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். முத்தாகியின் வருகை குறித்து வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து அதிகார பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்காத நிலையில், மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கான உதவிகளை வழங்கி வருகிறது என்பது தெரிவிக்கப்படுகிறது.