மட்டக்களப்பில் சுய தொழில் முயற்சியார்களுக்கான தையல் நிலையம் திறந்து வைப்பு
மட்டக்களப்பு(Batticaloa) சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தினால் சுய தொழில் முயற்சியாளர்களின் மேம்பாட்டை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள “தையல் நிலையம்” மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உ.உதயகாந்த் தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டுள்ளார்.
சுய தொழில் முயற்சி
சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் தையல் துறையில் ஆர்வமுள்ள சுய தொழில் முயற்சியாளர்களது தொழில் முயற்சியினை மேம்படுத்தும் நோக்கிலேயே குறித்த தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
“சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம்” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள “தையல் நிலையம்” மட்டக்களப்பு நகரில் பிரதான சந்தைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான கடைத்தொகுதியின் ஆறாம் இலக்க கடையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமானது கடந்த ஒரு வருடமாக சுயதொழில் முயற்சியாளர்களது மேம்பாடு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு மிகவும் திறம்பட செயலாற்றிவருவதுடன் இம்முயற்சிக்கு தனியார் அமைப்பும் தமது அனுசரனையினை வழங்கி தையல் இயந்திரம் உள்ளிட்ட உபகரண தொகுதிகள் சிலவற்றையும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |