சம்மாந்துறையில் சிறைச்சாலை பேருந்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்

Sri Lanka Sri Lanka Magistrate Court Eastern Province Crime
By Rakshana MA Dec 21, 2024 07:18 AM GMT
Rakshana MA

Rakshana MA

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் தப்பி ஓடியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று(20) இடம்பெற்றுள்ளது.  

இதனால் தற்போது பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் என பலரும் தப்பிச்சென்ற சந்தேக நபரை தேடிவருகின்றனர்.

வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு!

வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு!

விசாரணை

தப்பிச்சென்ற சந்தேக நபர் 28 வயது மதிக்கத்தக்க நபர் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

மேலும், குறித்த நபரை  மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்து வரும் போதே இவ்வாறு தப்பி சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறையில் சிறைச்சாலை பேருந்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் | Suspect Escape From Sammanthurai Prison Bus

அத்துடன் தப்பி சென்ற சந்தேக நபர் சம்மாந்துறை உடங்கா 02 பகுதியைச் சேர்ந்த ரிசாட் முகம்மட் சாதிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மோடியை சந்தித்த அநுர! மறைக்கப்பட்ட பல விடயங்கள்

மோடியை சந்தித்த அநுர! மறைக்கப்பட்ட பல விடயங்கள்

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW