படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
Sri Lanka Police
Crime
Murder
By Rukshy
மகியங்கனையின் அலுகெட்டியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாகக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபரின் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செப்டெம்பர் 10 ஆம் திகதி நடந்த சம்பவம் தொடர்பாக மகியங்கனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தொடங்கிய சிறப்பு விசாரணையைத் தொடர்ந்து, சந்தேக நபர் நேற்று இரவு (10.09.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மபாகடாவேவ பகுதியில் வசித்து வந்த 22 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளாார்.

மகியங்கனை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.