இலங்கையில் பல இடங்களில் மின் தடை! வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
இன்று காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட சமச்சீரற்ற காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், மின்சாரம் முழுமையாக வழமைக்கு திரும்புவதற்கு பல மணிநேரம் ஆகும் என்று உதயங்க ஹேமபால மேலும் தெரிவித்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் சில பகுதிகளிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் இலங்கை மின்சார சபையினை தொடர்பு கொள்ள முற்பட்டபோதும் அது பலனளிக்கவில்லை.