அரிசி கையிருப்பு தொடர்பில் விசேட கணக்கிடும் செயற்பாடுகள் ஆரம்பம்
களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தொடர்பில் விசேட கணக்கிடும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றும் (26) நாளையும் (27) 4 மாவட்டங்களை மையப்படுத்தி அரிசி இருப்பு கணக்கிடும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அரிசியின் விலை
சமீப நாட்களாக, சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அரிசியின் விலை அதிகமாக இருப்பதாகவும் நுகர்வோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்தநிலைமை தொடர்பில் ஜனாதிபதி பாரிய அரிசி ஆலை வர்த்தகர்களை வரவழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன், அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |