கம்பஹாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசேட நடவடிக்கை
Gampaha
Prasanna Ranatunga
By Mayuri
கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கான காரணங்களை ஆராய்வதற்காக விசேட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதான கால்வாய்கள் மற்றும் நீர் வழித்தடங்களை கண்காணித்து நீர் வடிகால் தடைகளை கண்டறிய எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மும்முனை வேலைத்திட்டம்
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹாவை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்ற மும்முனை வேலைத்திட்டம் அடையாளம் காணப்பட்டு குறுகிய கால தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |