கடல் கொந்தளிப்பு : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Jul 17, 2025 11:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீட்டராக அதிகரிக்கும் என்றும், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 - 3.0 மீட்டர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

எச்சரிக்கை

இதன் காரணமாக புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Srilanka Sea Red Alert Today

கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழில் சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருக்கள்மட புதைகுழிகளைப் பற்றி உண்மை...

குருக்கள்மட புதைகுழிகளைப் பற்றி உண்மை...

நாட்டில் வேகமாக பரவும் நோய்..! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

நாட்டில் வேகமாக பரவும் நோய்..! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW