கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்
iPhone
Sri Lanka NGO
By Fathima
கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வரும் நிலையில் இதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.