யாழில் சிறீதரன் மற்றும் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

By Fathima Feb 16, 2024 06:28 AM GMT
Fathima

Fathima

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீதரனின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.

மரியாதை நிமித்தம்  சந்திப்பு

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

யாழில் சிறீதரன் மற்றும் ஜீவன் தொண்டமான் சந்திப்பு | Sridharan And Jeevan Thondaman Meets In Jaffna

இதன்போது நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.