கனேடியத் தூதுவரை சந்தித்த சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன்

Ilankai Tamil Arasu Kachchi S. Sritharan Canada Charles Nirmalanathan
By Madheeha_Naz Feb 13, 2024 09:58 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது, நேற்றைய தினம் (13.02.2024) கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இச்சந்திப்பில், கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கனேடியத் தூதுவரை சந்தித்த சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் | Sridharan And Charles Met Canadian Ambassador

வாழ்த்துரைத்த தூதுவர்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துரைத்த தூதுவர், ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளுக்கு தம்மாலான பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.