அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறவுள்ள இலங்கையர்
உலகின் ஏழு கண்டங்களின் மிக உயரமான சிகரங்களில் ஏறி அங்கு இலங்கை தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்பதே தனது ஒரே நம்பிக்கை என இலங்கை மலையேற்ற வீரர் ஜோஹான் பீரிஸ்(Johan Pieris) தெரிவித்துள்ளார்.
இதன்படி, 4,690 மீற்றர் உயரம் கொண்ட அண்டார்டிகாவின் மிக உயரமான மலையான வின்சன் மலையில் ஏறுவதற்காக இன்று(05) அதிகாலை இலங்கையில் இருந்து புறப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மலையேற்ற சாதனை
மேலும், ஐம்பது வயதான ஜோஹான் பீரிஸ் ஆசியாவின் நான்கு மலைகளில் - எவரெஸ்ட், ஆஸ்திரேலியா - கொஸ்கியுஸ்கோ, ஆப்பிரிக்கா - கிளிமஞ்சாரோ மற்றும் ஐரோப்பா - எல்ப்ரெஸ் ஆகிய நான்கு மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் ஏழு கண்டங்களின் உயரமான சிகரங்களில் ஏற அவருக்கு எஞ்சியிருப்பது அர்ஜென்டினாவின் அகன்காகுவா மற்றும் அலாஸ்காவில் உள்ள டினாலி மலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |