யாழில் உடல்கூற்று பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட சடலம்

Jaffna Northern Province of Sri Lanka Law and Order
By Theepan Jan 04, 2025 10:51 AM GMT
Theepan

Theepan

2022 ஆம் ஆண்டு ஹைஏஸ் ரக வாகனத்துடன் மோதி உயிரிழந்த 42 வயதான ஜேசுதாசன் ரஞ்சித் குமாரின் உடலம் சென்பீற்றர்ஸ் சேமக்காலையில் உறவினர்களின் ஏக்கத்தோடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் - இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதன்பின்னர் நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சீனி உற்பத்தியில் கவனம் செலுத்தும் அரசாங்கம் : தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்

சீனி உற்பத்தியில் கவனம் செலுத்தும் அரசாங்கம் : தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்

மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு

இந்தநிலையில், குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்திலும் வழக்கு இருந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

யாழில் உடல்கூற்று பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் | Body Exhumed For Autopsy In Jaffna

இந்நிலையில் அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த நிலையில் கிராம சேவகரும் அதற்கு இணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டதுடன், கல்லூண்டாய் சென். பீற்றர் தேவாலய சேமக்காலையில் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இது இவ்வாறு இருக்கையில் குறித்த நபர் மீதான விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபர் அங்கு பிரசன்னமாகவில்லை.

உடற்கூற்று பரிசோதனை

அவர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன்பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

யாழில் உடல்கூற்று பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் | Body Exhumed For Autopsy In Jaffna

அந்தவகையில் சடலத்தை புதைத்த பகுதி, மல்லாகம் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உள்ளமையால் இது குறித்து மல்லாகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

அந்தவகையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அவரது சடலத்தை தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்றையதினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஜெகநாதன் சுபராகினி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன், தடயவியல் பொலிஸார், வலி தென்மேற்கு பிரதேச சபையினர், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானிப்பாய் பொலிஸார், கிராம அலுவலர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் ஆகியோரின் பிரசன்னத்துடன் சடலம் அகழ்ந்து எடுக்கப்பட்டது.

இவ்வாறு அகழ்ந்து எடுக்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றம்

மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை உடைந்து விழுந்த சம்பவம்! இரண்டாமவரும் பலி

மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை உடைந்து விழுந்த சம்பவம்! இரண்டாமவரும் பலி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW