இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (31) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்த வாரம் முழுவதும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று தளம்பல் காணப்பட்ட நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.45 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் 293.23 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்று 301.15 ரூபாவாக காணப்பட்டதோடு, இன்று 301.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
டொலரின் பெறுமதி மாற்றம்
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 209.96 ரூபாவாகவும், கொள்வனவு விலை 201.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 315.54 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 303.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 376.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 363.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 189.89 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 180.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 224.69 ரூபாவாகவும் ஆகவும் ,கொள்வனவு பெறுமதி 214.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 1.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.89 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.
வர்த்தக வங்கிகளில் நிலவரம்
இந்நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (31) வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 292.80 முதல் ரூ. 293.75 இற்கும் விற்பனை விலை ரூ. 302.80 முதல் ரூ. 303.75 பதிவாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 291.74 முதல் ரூ. 292.38 இற்கும் ரூ.302.21 முதல் ரூ.302.87 முறையே பதிவாகி இருப்பதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 291.18 முதல் ரூ. 291.96 வரையிலும் விற்பனை பெறுமதி ரூ. 300.75 முதல் ரூ. 301.50 என்றவாறாகக் காணப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |