இலங்கையில் தொழில் வாய்ப்புக்களை இழந்த பல இலட்சம் பேர்! அம்பலப்படுத்திய அரசியல்வாதி
ராஜபக்சர்களினால் கடந்த ஒரு ஆண்டுக்குள் மாத்திரம் ஆறு இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாக 43 ஆவது படையணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ராஜகிரிய பகுதியில் கடந்த திங்கட்கிழமை (01.05.2023) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஆறு இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழப்பு
‘‘மே தின கூட்டம் அரசியல் கூட்டமாக மாற்றமடைந்து விட்டது. மே தின கூட்ட மேடைகளில் அரசியல்வாதிகள் தங்களின் எதிர்கால அரசியல் தொடர்பில் கருத்துரைக்கிறார்களே தவிர தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் எவரும் கருத்துரைக்கவில்லை.
தொழிலாளர்களின் உரிமை தொடர்பில் ராஜபக்சர்கள் மே தின கூட்டத்தில் கருத்துரைக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்சர்கள் பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சுமார் ஆறு இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்.
நாட்டு மக்களின் தொழில் உரிமை, நிம்மதியாக வாழும் உரிமை ஆகியவற்றை இல்லாதொழித்த ராஜபக்சர்கள் இன்று உழைக்கும் மக்களின் உரிமை பற்றி பேசுகிறார்கள். தங்களின் அரசியல் நோக்கத்துக்காக தொழிலாளர்களின் உரிமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |