வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Parliament of Sri Lanka Sri Lanka Parliament vehicle imports sri lanka Import
By Rakshana MA May 03, 2025 05:34 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் தலைமையில் நேற்று (02) காலை நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சுங்க கட்டளைச்சட்டத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் எதிர்வரும் 8ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ள அதேநேரம் எதிர்வரும் 9ஆம் திகதி தனிநபர் பிரேரணை சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

கடும் உணவு தட்டுப்பாட்டில் தவிக்கும் காசா மக்கள்

கடும் உணவு தட்டுப்பாட்டில் தவிக்கும் காசா மக்கள்

நாடாளுமன்ற அமர்வு

இதேவேளை, குற்றச்செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீள அறவிடுவதற்கான சட்டமூலம் எனப்படும் குற்றச்செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கையொப்பமிட்டு சான்றுப்படுத்தியுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு | Sri Lankan Parliament Sit

இந்த சட்டமூலம் வாக்கெடுப்பின்றி, திருத்தங்கள் இன்றி கடந்த மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும், குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க குற்றச்செயல்களின் வரும்படிகள் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மின்சாரக் கட்டண அதிகரிப்பு திட்டம் குறித்து அநுர தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை

மின்சாரக் கட்டண அதிகரிப்பு திட்டம் குறித்து அநுர தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW