சுவிட்சர்லாந்தில் இலங்கை நபர் கொலை

By Rakshana MA Aug 10, 2025 04:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

சுவிட்சர்லாந்து நாட்டின் சென் காலன் மாநிலத்தில் அதிகாலை இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில், இலங்கையைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், 40 வயது இத்தாலிய நபர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (10) அதிகாலை 12:45 மணியளவில், இந்தச் சம்பவம், இடம்பெற்றுள்ளது.

காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிக்கும் சவூதி அரேபியா..!

காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிக்கும் சவூதி அரேபியா..!

நடந்த சோகமான சம்பவம்

மோதல் நடப்பதாக சென் காலன் பொலிஸ் அவசர அழைப்பு மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மூன்றாம் தரப்பினரிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

சுவிட்சர்லாந்தில் இலங்கை நபர் கொலை | Sri Lankan Man Killed In St Gallen

இதையடுத்து, சிறிது நேரத்தில் பொலிஸ் ரோந்துப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வெட்டுக்களுக்குள்ளாகி, படுகாயமடைந்த இரண்டு பேரைக் கண்டுள்ளனர்.

அவர்களில் இலங்கையைச் சேர்ந்த 54 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

40 வயது இத்தாலிய நபர் பலத்த காயங்களுடன் நோயாளர்காவு மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் சென் காலன் கன்டோனில் வசிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பொத்துவில் பேரெழுச்சிப் பெருவிழா

பொத்துவில் பேரெழுச்சிப் பெருவிழா

இலங்கையில் பல இடங்களில் சடலங்கள் மீட்பு

இலங்கையில் பல இடங்களில் சடலங்கள் மீட்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW