ஹஜ்ஜுக்கு சென்ற இலங்கையர் மக்காவில் வபாத்
Ampara
Sri Lanka
Eastern Province
By Vinoja
ஹஜ் யாத்திரைக்காக இலங்கை சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸ் மூலம் சென்ற பொத்துவிலைச் சேர்ந்த ஹாஜி ஆதம்கண்டு அப்துர் ரவூப் அவர்கள், மக்காவில் வபாத்தாகியுள்ளார்.
கஃபாவிற்கு அருகில், இஹ்ராம் உடையுடன் தஹஜ்ஜுத்/சுபஹ் தொழுகை நேரத்தில் மாரடைப்பால் அவர் மரணித்ததாகக் கூறப்படுகிறது.
அன்னாரின் ஜனாஸா ஜன்னத்துல் முஅல்லாவில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அல்லாஹ் அவருக்கு புனித ஹஜ்ஜுடைய நற்கூலிகைள வழங்கட்டும், அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதலை வழங்கட்டும். நம் அனைவருக்கு ஹஜ் செய்யும் பாக்கியத்தை வழங்கட்டும்.