வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையர் : பொலிஸார் வெளியிட்ட காரணம்

Sri Lanka Japan
By Fathima Dec 25, 2025 12:55 PM GMT
Fathima

Fathima

இலங்கையர் ஒருவர் துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஷினகாவா (Shinagawa) தொடருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சைக்காக அனுமதி

குறித்த இலங்கையர் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தனது கழுத்தை அறுக்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையர் : பொலிஸார் வெளியிட்ட காரணம் | Sri Lankan Arrested In Japan

இதனையடுத்து அப்பகுதிக்கு வருகை தந்த சுமார் பத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைகள் மற்றும் கழுத்து பகுதியில் காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த குறித்த இலங்கையர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.