இலங்கையில் நிலவும் கடும் வெப்பம்! மே 20இற்கு பிறகு ஏற்படும் மாற்றம்
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே 20ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மே 25 அல்லது 26க்கு பிறகு தென்மேற்கு பருவமழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.
வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிப்பு
இந்த நாட்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்தாலும், வளிமண்டலத்தின் வெப்பநிலையைக் குறைக்க கணிசமான மழைப்பொழிவு தேவை என்றும் அவர் கூறினார்.
புவி வெப்பமடைதல் காரணமாக இந்த நாட்டில் வளிமண்டலத்தின் வெப்பநிலை கடந்த வருடங்களை விட அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது கடுமையான செயல்களைச் செய்ய வேண்டாம் என்றும் சர்க்கரை கலந்த பானங்களை குடிப்பதால் நீர்ச்சத்து குறையும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.