மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
அடுத்த மாதம் முதல் மரக்கறிகளின் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அதிகாரி துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்டுள்ள அவர், ''குறித்த காலப்பகுதியானது அறுவடைக் காலமாக இல்லாததால் மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.
மரக்கறிகளின் விலை
மேலும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகளில் சிறிதளவு வித்தியாசம் காணப்படுகின்றது.
எனினும், இந்த நாட்களில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority ) நிர்ணயித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேங்காய் விலை
அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சில பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் 160 ரூபாய்க்கும் அதிக விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அடுத்த சில நாட்களில் தேங்காய் விலையில் எவ்விதக் குறைவும் ஏற்படாது எனவும் சில வர்த்தகர்கள் தேங்காய்களை வகைப்படுத்தி வெவ்வேறு விலைக்கு விற்பனை செய்வதாகவும் ஊடகங்கள் செய்தி ளெியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |