பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Ministry of Education A D Susil Premajayantha Dengue Prevalence in Sri Lanka Sri Lankan Schools
By Fathima Jun 11, 2023 10:27 AM GMT
Fathima

Fathima

2023 ஆம் ஆண்டு அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதல் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை தவணை நாளை (12.06.2023)ஆரம்பமாவதையிட்டு இன்று நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த கேட்டுக்கொண்டதற்கமைய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று (10.06.2023)ஆரம்பமாகியுள்ளது.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 

பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் | Sri Lanka Schools Start

இதன்போது நுளம்பு பெருக்கமுள்ள இடங்களை கண்டறித்து அவற்றை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபடுமாறும்  கேட்டுக்கொண்டுள்ளதுடன் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கியவாறு மாதிரி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.