இலங்கையின் யானைகள் வழங்கும் தீர்மானத்துக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு
Sri Lanka
Pakistan
By Fathima
பாகிஸ்தானுக்கு இரண்டு பெண் யானைகளை இலங்கை அன்பளிப்பாக வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கராச்சி மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்த ஆப்பிரிக்க யானையான நூர் ஜெஹானுக்குப் பதிலாக, பாகிஸ்தானுக்கு இலங்கை இரண்டு பெண் யானைகளை பரிசாக வழங்குவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த யானைகளில் ஒன்று, கராச்சிக்கு கொண்டு செல்லப்படும், மற்றொன்று லாகூர் அனுப்பப்படும் என்று இலங்கையின் தூதரக அதிகாரி யாசின் ஜோயா தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தானில் உள்ள விலங்கு பிரியர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை.
இலங்கையின் இந்த முடிவு குறித்து அனௌஷி அஷ்ரப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.