இலங்கையின் பிறப்பு விகிதம் வீழ்ச்சி: வெளியான எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka School Children
By Laksi Jan 09, 2025 01:33 PM GMT
Laksi

Laksi

 நாட்டின் பிறப்பு விகிதம் தற்போது பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த நிலைமை நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  "கடந்த 10 ஆண்டுகளில் கவனிக்கப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால், இந்த நாட்டில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

பிறப்பு விகிதம் வீழ்ச்சி

2013 ஆம் ஆண்டில் 350,000 இருந்த பிறப்புகள், 2024 ஆம் ஆண்டில் 228,000 ஆகக் குறைந்துள்ளது.அந்தக் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இலங்கையின் பிறப்பு விகிதம் வீழ்ச்சி: வெளியான எச்சரிக்கை | Sri Lanka S Birth Rate Is Falling

குழந்தை பருவ நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழந்தைப் பருவப் புற்றுநோய் பற்றிய அறிக்கைகள் அதிகரித்துள்ளன. மனநோய் அதிகரிப்பதையும் நாம் காண்கிறோம்.

இது போன்று குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால், எதிர்காலம் நன்றாக இருக்காது. நாம் அனைவரும் இதைப் பற்றி கவனமாக இல்லாவிட்டால், கடினமான சூழ்நிலையை எதிர்நோக்க நேரிடும் என்றார்.

பிரமதர் ஹரிணியால் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

பிரமதர் ஹரிணியால் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

நாளை முதல் நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாளை முதல் நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW