இன்று விசேட நாடாளுமன்ற அமர்வு
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் 16ஆம் பிரிவின் பிரகாரம் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குச் சபாநாயகரால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு அமைய விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது.
2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11வது பிரிவுக்கு அமைய அரசால் நிதி செயல்நுணுக்கக் கூற்று ஜூன் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
சபை ஒத்திவைப்பு விவாதம்
இதற்கமைய நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இ ற்கு அமைய பிரதமரினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் நாடாளுமன்றம் இன்று மு.ப. 9.30 மணிக்குக் கூட்டப்படவுள்ளது.
இது தொடர்பில் ஆளும் கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பி.ப. 4.30 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |