அமைச்சரவை மாற்றம் - இரண்டாக அதிகரித்த முஸ்லிம் பிரதி அமைச்சர்கள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Cabinet NPP Government
By Faarika Faizal Oct 10, 2025 08:00 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

இன்று (10.10.2025) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

எதிர்வரும், 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தோடு இணைந்த அபிவிருத்தி இலக்குகளின் செயல்திறனை விரைவுபடுத்தும் நோக்கில் இவ்வாறு அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இம்முறை அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சரவையில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக இருந்த எம்.எம். மொஹமட் முனீர் முழப்பர் இந்தமுறை சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சராகவும், மற்றும் எம்.எம்.ஐ. அர்கம் வலுசக்தி பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, அமைச்சர்களாக,

1.பிமல் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர்

2.அனுர கருணாதிலக்க - துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்

3.எச்.எம். சுசில் ரணசிங்க - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

அமைச்சரவை மாற்றம் - இரண்டாக அதிகரித்த முஸ்லிம் பிரதி அமைச்சர்கள் | Sri Lanka New Cabinet

பிரதி அமைச்சர்கள்

1.கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

2.டி.பி. சரத் - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்

3.எம்.எம். மொஹமட் முனீர் - சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்

4.எரங்க குணசேகர - நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

5.வைத்தியர் முதித ஹங்சக விஜயமுனி - சுகாதார பிரதி அமைச்சர்

6.அரவிந்த செனரத் விதாரண - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

7.எச்.எம். தினிது சமன் குமார - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

8.யு.டி. நிஷாந்த ஜயவீர - பொருளாதார அபிவிருத்தி பிரதிய அமைச்சர்

9.கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன - வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

10.எம்.எம்.ஐ. அர்கம் - வலுசக்தி பிரதிஅமைச்சர் 

அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த ரணில் - ராஜபக்ச : எதிர்ப்பு பேரணி நடத்தவும் திட்டம்

அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த ரணில் - ராஜபக்ச : எதிர்ப்பு பேரணி நடத்தவும் திட்டம்

ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW