இலங்கை முழுவதும் மரநடுகை மேற்கொள்ளும் தென்னாபிரிக்க பிரஜை
இலங்கை முழுவதும் நடந்து சென்று பல்வேறு மரங்களை நடுகை செய்யும் வெளிநாட்டவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மகத்தான பணியை தென்னாபிரிக்காவை சேர்ந்த Anthony Stone என்பவரே செய்து வருவதுடன் உலக நாடுகளை சேர்ந்த பல வகையன மரங்களை தனது தனிப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்து வருகிறார்.
கொழும்பில் இருந்து தெவுந்தர முனை வழியாக கதிர்காமம் வரை நடந்து சென்று அங்கிருந்து கண்டி வழியாக பருத்தித்துறை வரை நடந்து சென்று மரம் நடும் பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்.
உலகளாவிய ரீதியில் மரம் நடுகை செயற்றிட்டம்
குறித்த நபர் சொந்த யூடியூப் சேனலில் அவர் பயணம் செய்யும் நாடுகளின் வீடியோக்களை வெளியிடுவதுடன் அதில் வரும் பணத்தில் உலக நாடுகளில் மரம் நடுவதற்கு கொடுத்து வருகின்றார்.
இந்த நாட்களில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.