இலங்கையில் ஒரே நாளில் 1,241 பேர் கைது!
இலங்கையின் (Srilanka) அனைத்து பகுதிகளிலும் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பில் மொத்தம் 1,241 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சோதனை நடவடிக்கை
இந்த நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய பணிகளாக, மொத்தமாக 21,132 பேர் சோதனையின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.
அதற்கமைய 7,922 வாகனங்கள் மற்றும் 6,545 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன.
அத்தோடு, 254,679 மில்லிகிராம் ஐஸ், 112,567 மில்லிகிராம் ஹெராயின், 3,738,356 மில்லிகிராம் கஞ்சா ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டதுடன், 321 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
விசேட சுற்றி வளைப்பு
இந்த நடவடிக்கையில் பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகளிலிருந்து 5,300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
2025 ஏப்ரல் 13ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர்ச்சியான சிறப்பு நடவடிக்கைகள், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகள் வைத்திருப்பவர்களை கண்டறிந்து கைது செய்வதே முக்கிய நோக்கமாக காணப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |