ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை குழு கூட்டம்

Srilanka Muslim Congress
By Mayuri Sep 08, 2024 09:32 AM GMT

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை மத்திய குழு கூட்டம் அதன் செயலாளர் எம்.எஸ்.எம்.அசாருதீன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் நேற்றைய தினம் (07) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் எம்.ஐ.எம். மன்சூர் கலந்து சிறப்பித்தார்.

கூட்டத்தில் பொதுக் கூட்டங்கள், வட்டார ரீதியான கருத்தரங்குகள், வட்டார ரீதியான காரியாலங்கள் திறத்தல், வட்டார ரீதியான வீடு வீடாகச் செல்லும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதிர், உயர்பீட உறுப்பினர்களான ஏ.எம்.ஏ.அஸீஸ், ஏ.எம்.தௌபீக், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சௌபீர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி யூ.கே.சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

GalleryGalleryGallery