மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தை இரண்டு நாட்கள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து திணைக்களம்
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மூடப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 5 இன் படி, மேற்படி வாக்களிப்பு நிலையத்தின் சுமூகமான செயல்பாட்டை எளிதாக்கும் வகையில்,
கொழும்பு மாநகர சபையின் இலக்கம் 06 மற்றும் 07 ஆகிய பிரிவுகளின் வாக்களிப்பு நிலையமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகம் செயற்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |