மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Electricity Prices
By Chandramathi Nov 25, 2024 01:01 AM GMT
Chandramathi

Chandramathi

இந்த வருடம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.

கட்டண திருத்தம்

அத்துடன் மின் கட்டண திருத்தம் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபையினால் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Sri Lanka Electricity Prices Fares

எவ்வாறாயினும், தாங்கள் முன்வைத்துள்ள மின்சாரக் கட்டணக் குறைப்பு போதாது என்பதால் மீண்டும் முன்மொழிவுகளை மீள்திருத்தம் செய்து சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நவம்பர் 8 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்த போதிலும், மின்சார சபை அன்றைய தினம் முன்மொழிவை சமர்ப்பிக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மின்சார கட்டணங்கள்

இதேவேளை நவம்பர் 22 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை கோரியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை இலங்கை மின்சார சபைக்கு கால அவகாசம் வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Sri Lanka Electricity Prices Fares

எவ்வாறாயினும், குறித்த திகதியில் இலங்கை மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்தாலும், முன்மொழிவுகளை ஆராய்ந்து மின்சார கட்டணங்களை திருத்துவதற்கு 6 முதல் 8 வாரங்களுக்கு இடைப்பட்ட கால அவகாசம் தேவைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, மின் கட்டண திருத்தம் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.