கொழும்பு - குருணாகல் பிரதான வீதியில் விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

Sri Lanka Police Colombo Accident
By Fathima Jun 12, 2023 04:56 AM GMT
Fathima

Fathima

கொழும்பு - குருணாகல் பிரதான வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

முச்சக்கரவண்டியொன்றும், டிப்பரொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (40), தாய் (39) மற்றும் மகன் (13) ஆகியோர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.