பொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஆரம்பம்

Department of Railways Election General Election 2024
By Laksi Nov 12, 2024 09:48 AM GMT
Laksi

Laksi

பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றும் (12) நாளையும் (13) இலங்கை போக்குவரத்து சபை விசேட பேருந்து சேவையை முன்னெடுக்கும் என அதன் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு

போக்குவரத்து சேவை

இதேவேளை,  தேர்தலுக்காக தூரப் பிரதேசங்களுக்கு செல்லும் மக்களுக்காக தினசரி தொடருந்து பயணங்களுக்கு மேலதிக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தொடருந்து துணைப் பொது மேலாளர் என்.ஜே. இடிபொல குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஆரம்பம் | Special Transport Service On General Elecction

மேலும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தேர்தல் சேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதால் நாளை (13) வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Kemunu Wijeratna) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தல்: பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ் அதிகாரிகள்

பொதுத் தேர்தல்: பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ் அதிகாரிகள்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW