ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்
Colombo
Sri Lanka Presidential Election 2024
By Laksi
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் நாளை (18) நடைபெறவுள்ளன.
விசேட போக்குவரத்து
அதன்படி, நாளை கொழும்பு நகரம், கொட்டாவ மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரசார கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |