தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புடனான சந்திப்பிற்கு தயாராகும் ரணில்

Ranil Wickremesinghe
By Mayuri Aug 11, 2024 09:09 AM GMT

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புடனான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரத்தியேக தொலைபேசி அழைப்பு

இந்த சந்திப்புக்காக குறித்த பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு அரசியல் கட்சிகளினதும், சிவில் அமைப்பினதும் பிரதிநிதிகளுக்குப் பிரத்தியேகமாக தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புடனான சந்திப்பிற்கு தயாராகும் ரணில் | Special Meeting With President

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW