பெண்களுக்கான விசேட கடன் திட்டம்
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையில் பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பல்வேறு காரணிகளால் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பு ஏனைய பிராந்திய மற்றும் ஆசிய நாடுகளை விட குறைவாகவே காணப்படுகின்றது.
2022இல் நடத்தப்பட்ட இலங்கை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி, பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான மக்கள் தொகையில் 35% பெண்கள், இது பொருளாதார பங்கேற்பின் பாலின பங்களிப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கிறது என்று அரசாங்கம் கூறுகிறது.
பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் தடை
மட்டுப்படுத்தப்பட்ட நிதியறிவு மற்றும் கடனைப் பெறுவதற்குத் தேவையான சொத்துக்கள் அல்லது பிற பிணையங்கள் பெண்களுக்கு இல்லாதது மற்றும் நிதி ஆதாரங்களை அணுகுவதற்கான வாய்ப்புகள் இல்லாமை ஆகியவை இலங்கையில் பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் முக்கிய தடைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனவே, 26-02-2024 திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 200 பில்லியன் ரூபாயில், 02 பில்லியன் ரூபா பெண்கள் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்படும். பொருளாதார நடவடிக்கைகள் தடைகளை நீக்கும் வகையில் சிறப்புக் கடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |