ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
Nandalal Weerasinghe
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
CBSL
By Laksi
இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |